சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் டிசம்பர் 9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில், இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, டிச.09 மற்றும் 10 ம் தேதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரவை கூடும் முதல் நாளிலேயே மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. டிச.09 மற்றும் 10 ம் தேதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்போது மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனி தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. மாநில அரசின் அனுமதி இன்றி மத்திய அரசு சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ள கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.