மாதத்தின் முதல் வேலை நாளிலேயே மகிழ்ச்சியளிக்கும் விதமாக சென்னையில் இன்றைய காலை நேர விலை நிலவரசப்படி ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. அதன் படி ரூ.480 குறைந்து ஒரு சரவன் தங்கம் ரூ.56,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை நிலவரம் சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வரப்படுகிறது. கடந்த அக்டோபர் 31ம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் சவரனுக்கு ரூ.60,000யை தாண்டி உச்சத்தைத் தொட்டிருந்தது.
தொடர்ந்து தங்கத்தின் விலையில் மாற்றங்கள் நீடித்து வந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.