சென்னை, புறநகரில் 100% பால் விநியோகம்: ஆவின் நிறுவனம் தகவல்


சென்னை: புயல் காரணமாக கனமழை பெய்​த​போ​தி​லும், சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் 100 சதவீதம் பால் விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்ளதாக ஆவின் நிறு​வனம் தெரி​வித்​துள்ளது. மழையின்​போது, பொது​மக்​களுக்கு பால் கிடைக்க ஆவின் நிறு​வனம் ஏற்பாடு செய்திருந்​தது. சென்னை​யில் 8 இடங்​களில் நவீன பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதுதவிர, சென்னை மற்றும் புறநகரில் ஆவின் பால் விநி​யோகம் தங்கு தடையின்றி விநி​யோகம் செய்ய ஏற்பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. இந்நிலை​யில், சென்னை, சுற்று​வட்டார பகுதி​யில் 100 சதவீதம் பால் விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்ளதாக ஆவின் நிறு​வனம் தெரி​வித்​துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறு​வனம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: கடந்த 30-ம் தேதி சுமார் 15 லட்சம் லிட்டர் பால் , 25 ஆயிரம் பாக்​கெட் யு.எச்.டி பால் மற்றும் 10 ஆயிரம் கிலோ பால் பவுடர் பொது​மக்களுக்கு விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளது. கனமழை இருந்த போதி​லும் பால் விநி​யோகத்​தில் எவ்வித சிறு தடையும் ஏற்பட​வில்லை.

சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்​படும் முகாம்​களுக்கு உடனடியாக ஆவின்பால், பால் பவுடர் மற்றும் யு.எச்.டி. பால் உடனுக்​குடன் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

சென்னை முழு​வதும் உள்ள அனைத்து பாலகங்​களி​லும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெறுகிறது. பொது​மக்​களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேர​மும் பால் ​விநி​யோகம் நடை​பெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x