இன்று டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதைப் போலவே நீலகிரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் மட்டும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கல்வி அதிகாரி கற்பகம் அறிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை தேர்வு கட்டுப்பாட்டாளர் கதிரவன் வெளியிட்டுள்ளார். மேலும் சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.