சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 28,500 கன அடி தண்ணீர் வெளியேற்றம்


சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 28,500 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளதால் 4 மாவட்டங் களுக்கு வெள்ள அபாய எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் திருவண் ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித் துள்ளது.

நேற்று முன்தினம் (நவ.30-ம் தேதி) காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 430 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று (டிச.1-ம் தேதி) காலை 6 மணிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித் ததால், 119 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 118 அடியைக் கடந்தது. காலை 11 மணி நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 15,500 கன அடி நீர் வந்ததால், அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 19,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனிடையே நேற்று இரவு 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 25,600 கன அடி தண்ணீர் வருவதால், அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 28,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணையில் 7,100 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அணைப் பகுதி யில் 13 செ.மீ., மழை பெய் துள்ளது. இதனால், தென் பெண் ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை, 3-வது முறையாக விடுக்கப்பட்டது. அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடிக்குக் கூடுதலாக நீர் வெளியேற்றப்படலாம் என்ப தால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரை யோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினரை நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். ஜவ்வாது மலையில் நேற்று முன்தினம் (நவ.30-ம் தேதி) காலையில் இருந்து நேற்று (டிச.1-ம் தேதி) காலை 8.30 மணி வரை, 24 மணி நேரத்தில் 21 செ.மீ., மழை பெய்தது.

இதனால் மலை யடிவாரத்தில் உள்ள குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. செங்கம் அருகே 59.04 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 56.42 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 6,358 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து செய்யாற்றில் 4,025 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் 630.80 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அணைப் பகுதியில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது.

படைவீடு அருகே 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 57.86 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு வரும் 3,500 கன அடி நீரும், கமண்டல நதியில் வெளியேற்றப்படுகிறது. அணைப் பகுதியில் 241.557 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அணைப் பகுதியில் 11.5 செ.மீ., மழை பெய்துள்ளது. கலசப்பாக்கம் அருகே 22.97 அடி உயரம் கொண்ட மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 19.84 அடியாக உயர்ந்தது.

அணைக்கு விநாடிக்கு வரும் 1,820 கன அடி நீரும், செய்யாற்றில் முழுமை யாகத் திறந்து விடப்படுகிறது. அணையில் 70 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அணைப் பகுதியில் 21 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால் செய் யாறு மற்றும் கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக இருக்க நீர்வளத் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது.

100 ஏரிகள் நிரம்பியது: திருவண்ணாமலை மாவட் டத்தில் நீர்வளத் துறை கட்டுப் பாட்டில் 697 ஏரிகள் உள்ளன. இதில் 100 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டியுள்ளன.

x