சிதம்பரத்தில் குரங்குகளுக்கு பயந்து செல்போன் டவரில் அமர்ந்திருந்த ஊழியர் - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


கடலூர்: சிதம்பரத்தில் குரங்குக்கு பயந்து ஒரு மணி நேரமாக பிஎஸ்என்எல் டவரின் மேலே ஊழியர் ஒருவர் அமர்ந்திருந்தார். குரங்குகளை விரட்டி பத்திரமாக கீழே அவரை தீயணைப்புத் துறையினர் கீழே கொண்டு வந்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள மாரியப்பா நகரில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான டவர் ஒன்று உள்ளது, அதில் பழுது ஏற்பட்டதன் காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.29) மாலை பிஎஸ்என்எல் ஊழியர் புண்ணியமூர்த்தி பழுதை சரி நீக்க பாலமுருகன் என்பலுடன் சென்று, புண்ணியமூர்த்தி டவர் மீது ஏறி உள்ளார். அவர் ஏறிய சில நிமிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் அவரை சுற்றி வளைத்துக் கொண்டன.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல், டவரில் இருந்து இறங்க முடியாமல் தவித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரமாக டவரில் பாதுகாப்பாக இருந்துள்ளார். கீழே இருந்து இதனை பார்த்த பாலமுருகன் சிதம்பரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற சிதம்பரம் தீயணைப்பு துறை அலுவலர் மணிமாறன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குழுவினர் டவர் மீது ஏறி ஊழியர் புண்ணியமூர்த்தியை இறங்க விடாமல் டவர் மீது அமர்ந்திருந்த குரங்குகளை குச்சியின் மூலம் விரட்டி அடித்தனர்.

குரங்குகள் சென்ற பின்னர் புண்ணியமூர்த்தி கீழே இறக்கினர், சுமார் ஒரு மணி நேரமாக என்ன செய்வது என்று புரியாமல் டவர் மீது அமர்ந்த புண்ணியமூர்த்தியை பத்திரமாக இறக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குரங்குகளின் அச்சுறுத்தலால் பிஎஸ்என்எல் ஊழியர் கீழே இறங்க முடியாமல் அவதி அடைந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபல்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

x