விருதுநகர் | புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் 88 பேருக்கு ஆணைகள் வழங்கல்


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 88 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இன்று காலை பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறைக்கான ஆள் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 3,359 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் 88 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 43 பேர் சென்னையில் முதல்வரிடம் பணிநியமான ஆணைகளை பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட 131 பேரில் 101 பேர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவுக்கும், 30 பேர் ஆயுதப்படை பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

x