விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியிலிருந்து அரியவகை ரத்தம் ரயில் மூலம் அரியலூருக்கு அனுப்பி வைப்பு


விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்  ரத்த வங்கியில் இருந்து  அரியவகை ரத்தம் அனுப்பிவைக்க்ப்படுகிறது. 

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியிலிருந்து அரியவகை ரத்தம் ரயில் மூலம் அரியலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஹேமாவதி (27) என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிகிச்சையின்போது அரிய வகை ரத்தம் பாம்பே OH தேவைப்பட்டது. ஹேமாவதிக்கு செலுத்தப்படுவதற்காக தேவைப்படும் இந்த அரிய வகை ரத்தம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், Life of giving foundation - ஒருங்கிணைப்பில் நேற்று மாலை பல்லவன் ரயில் மூலம் ''பாம்பே-ஓ'' வகை ரத்தம் தமிழ்நாடு போக்குவரத்து துறையைச் சேர்ந்த குணசேகரன், ரத்த வங்கியைச் சேர்ந்த அசோக்குமார், மனிதம் காப்போம் குழு நிறுவனர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சந்துரு குமார் ஆகியோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பான முறையில் ரயில் அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு 8.30 மணிக்கு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அரியவகை ரத்தம் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹேமாவதிக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த அரிய வகை பாம்பே வகை ரத்தம் ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


x