சென்னையில் சுய உதவிக்குழுக்களின் இயற்கை சந்தை: இன்றும், நாளையும் நடக்கிறது


இயற்கை சந்தை

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பில் இயற்கை சந்தை, இன்றும், நாளையும் என 2 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒவ்வொரு மாதமும் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இயற்கை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த வாரத்துக்கான சந்தை இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள், கீரை வகைகள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கை வகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றுடன் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்களும் கிடைக்கும். காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த இயற்கை சந்தையை வாடிக்கையாளர்கள் அணுகி தேவைப்படும் பொருட்களை வாங்கி செல்லலாம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

x