காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும்: தமிழகத்தில் நவ.26 முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு அந்த​மான் கடல் பகுதி​களி​லிருந்து மன்னார் வளைகுடா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. மேலும், தெற்கு அந்த​மான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதி​களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு​கிறது.

இதன் காரண​மாக, தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்​றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்​கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை​யில் நகர்ந்து, அதற்​கடுத்த இரு தினங்​களில் தெற்கு வங்கக் கடல் பகுதி​களில் காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெறக்​கூடும். இதன் காரணமாக இன்றும் நாளை​யும் தமிழகத்​தில் ஓரிரு இடங்​ லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும்.

வரும் 25-ம் தேதி கடலோர மாவட்​டங்​களில் பெரும்​பாலான இடங்​களி​லும், உள் மாவட்​டங்​களில் சில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களி​லும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். வரும் 26, 27, 28-ம் தேதி​களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகுதி​களில் அதிகாலை நேரத்​தில் லேசான பனி மூட்டம் காணப்​படும்.

தென் தமிழக கடலோரப் பகுதி​கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்​கடல் பகு​தி​களில் வரும் 25, 26-ம் தே​தி​களில் மணிக்கு 35 ​முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் ​காற்று வீசக்​கூடும். இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

x