அரசுப் பள்ளி ஆசிரியர் படுகொலை தமிழகம் முழுவதும் டிட்டோஜேக் போராட்டம்


அரசுப் பள்ளியில் வகுப்பறையிலேயே ஆசிரியர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு |

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை செய்​யப்​பட்டதை கண்டித்து தமிழகம் முழு​வதும் டிட்​டோஜேக் கூட்​டமைப்​பினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட்​டனர். தஞ்சாவூர் மல்லிப்​பட்​டிணம் அரசுப் பள்ளி வகுப்​பறை​யில் கற்பித்தல் பணியில் ஈடுபட்​டிருந்த ஆசிரியை ரமணி நேற்று கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்​வலையை ஏற்படுத்​தி​யுள்​ளது.

இந்நிலை​யில் ஆசிரியர் கொலையை கண்டித்தும், பணிப் பாது​காப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்​தி​யும் தமிழ்​நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்​கங்​களின் கூட்டு நடவடிக்கைக்​குழு (டிட்​டோஜேக்) சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று ஆர்ப்​பாட்டம் நடத்​தப்​பட்​டது. அதன்படி சென்னை எழும்​பூரில் உள்ள மாவட்ட முதன்​மைக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் நூற்றுக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்​கமிட்​டனர்.

தொடர்ந்து போராட்​டக்​குழு​வினர் கூறும்​போது, “தற்​போதைய சூழலில் எங்கிருந்து தாக்​குதல் வருமோ என்ற அச்சத்​தில் பணிபுரிய வேண்டிய சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்​பட்​டுள்​ளனர்.

இந்நிலை மாற மருத்துவர் உள்ளிட்ட அரசுத் துறை​யினருக்கு உள்ளதைப் போல் ஆசிரியர்​களுக்​கும் பணிப் பாது​காப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே அமல்​படுத்த வேண்​டும்​''என்​றனர். இதேபோல், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் (எஸ்​எஸ்​டிஏ) உள்ளிட்ட சில அமைப்பு​களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்​ளிக்கு வருகை தந்து தங்​கள் எ​திர்ப்பை ப​திவு செய்​தனர் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

x