அதானி குழும லஞ்ச பட்டியலில் மின்வாரியம்; தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: அ​தானி குழு​மத்​திடம் லஞ்சம் பெற்ற நிறு​வனங்கள் பட்டியலில் தமிழக மின்​வாரியம் இடம் பெற்றிருப்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் வலியுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா​வில் பல்வேறு மாநிலங்​களில் மின்சார வாரி​யங்​களுக்கு சூரிய ஒளி மின்​சாரம் தயாரித்து வழங்​கு​வதற்கான ஒப்பந்​தங்​களைப் பெற ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுக்​கப்​பட்டதை மறைத்து, அமெரிக்கா​வில் முதலீடு திரட்​டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்​டோர் மீதும் அமெரிக்க நீதி​மன்​றத்​தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்
​கிறது. இந்த வழக்​கில் அதானியைக் கைது செய்ய பிடி​யாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்ளது.

நியூ​யார்க் கிழக்கு மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்யப்​பட்ட வழக்கு ஆவணத்​தில், 20 மற்றும் 21-ஆம் பத்தி​களில் தமிழக மின்​வாரிய​மும், அதன் அதிகாரி​களும் இதில் சம்பந்​தப்​பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள் என்று குறிப்​பிடப்​பட்​டுள்ளனர். 50-ம் பத்தி​யில், ‘கடந்த 2021 ஜூலை முதல் 2022 பிப்​ரவரி வரை இந்திய அரசு அதிகாரி​களுக்கு கையூட்டு வழங்​கு​வதாக அளிக்​கப்​பட்ட வாக்​குறு​தி​யின் அடிப்​படை​யில், ஒடிசா, ஜம்மு - காஷ்மீர், தமிழகம், சத்தீஸ்​கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்​களின் மின்சார வாரி​யங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்​பத்​திக் கழகத்​திட​மிருந்து உற்பத்​தி​யுடன் இணைந்த திட்​டத்​தின்படி சூரிய ஒளி மின்​சாரம் வாங்​கு​வதற்கான ஒப்பந்​தங்களை செய்து கொண்​டிருக்​கின்றன.

இவற்றில் ஆந்திர மின்சார வாரி​யத்​துக்கு 7 ஜிகாவாட் சூரிய ஒளி மின்​சாரம் வழங்​கு​வதற்கான ஒப்பந்​ததைப் பெறு​வதற்காக அம்மாநில மின்​வாரிய அதிகாரி​களுக்கு ரூ.1,750 கோடி லஞ்சம் வழங்​கப்​பட்​டதாக கூறப்​பட்​டிருக்​கிறது. லஞ்சம் பெற்ற நிறு​வனங்கள் பட்டியலில் தமிழக மின்​வாரி​யத்​தின் பெயரும் இடம் பெற்றுள்​ளது.

அதுமட்டுமின்றி, லஞ்சம் வழங்​கப்​பட்​டதாக அந்த ஆவணத்​தில் குறிப்​பிடப்​பட்​டுள்ள காலகட்​டத்​தில்​தான், அதாவது 2021-ம் ஆண்டு செப்​.16-ம் தேதி, அதானி குழு​மத்​தால் உற்பத்தி செய்​யப்​படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்​சா​ரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்​பத்​திக் கழகத்​தின் வாயிலாக வாங்​கும் ஒப்பந்​தத்​தில் தமிழக மின்​வாரிய​மும், இந்திய சூரிய ஒளி மின்னுற்​பத்​திக் கழகமும் கையெழுத்​திட்​டுள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்க நீதி​மன்ற குற்​றச்​சாட்டை உறுதி செய்​கிறது.

தமிழக மின் வாரியம் ரூ.1.8 லட்சம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. இதற்குக் காரணம் அதானிகுழுமம் போன்ற நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதுதான். ஆட்சியாளர்களின் லாபம் மற்றும் சுயநலத்துக்காக பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தில் தள்ளுவதையும், அப்பாவி மக்கள் மீதுமின்கட்டண சுமையை சுமத்துவதையும் அனுமதிக்க முடியாது. அதானி குழு​மத்​தால் லஞ்​சம் வழங்​கப்​பட்ட நிறு​வனங்​கள் பட்​டியலில் தமிழக மின்​வாரி​யத்​தின் பெயரும் இடம்​பெற்றுள்ள நிலை​யில், இது​குறித்து தமிழக அரசு ​விசா​ரணைக்கு உத்​தரவிட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

x