நவ.25 முதல் வட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு


சென்னை: அந்த​மான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி ​உள்​ளது. இது வரும் 25-ம் தேதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: குமரிக்​கடல் மற்றும் அதையொட்டிய பகுதி​களின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. மேலும், தெற்கு அந்த​மான் மற்றும் அதையொட்டிய பகுதி​களில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி​யுள்​ளது.

இதனால் வரும் 23-ம் தேதி தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதி​களில் காற்​றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்​கூடும். இது மேற்கு, வடமேற்கு திசை​யில் நகர்ந்து, அதற்​கடுத்த இரு தினங்​களில் தெற்கு வங்கக்​கடல் பகுதி​களில் காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெறக்​கூடும்.

வரும் 25-ம் தேதி கடலோர தமிழகத்​தில் சில இடங்​களி​லும், உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், வரும் 26, 27-ம் தேதி​களில் தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். இவ்​வாறு அந்த செய்திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x