போலீஸ் தடுத்தாலும் மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழாவை நடத்துவோம் - வன்னியர் சங்கம் உறுதி


புதுச்சேரி தவளக்குப்பத்தில் நடந்த பாமக, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி.

புதுச்​சேரி: போலீ​ஸார் தடுத்​தா​லும் தடையை மீறி மாமல்​லபுரத்​தில் சித்திரைத் திரு​விழா நடைபெறும் என்று வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்​மொழி அறிவித்​துள்ளார்.

பாமக, வன்னியர் சங்கம் மற்றும் உழவர் பேரியக்க அமைப்பு நிர்​வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்​சேரி தவளக்​குப்​பத்​தில் நேற்று நடைபெற்​றது. பாமக மாநில அமைப்​பாளர் கணபதி தலைமை வகித்​தார். இந்தக் கூட்​டத்​தில், 12 ஆண்டு​களுக்​குப் பிறகு மாமல்​லபுரத்​தில் பாமகவால் நடத்​தப்பட உள்ள சித்திரைத் திரு​விழா குறித்து ஆலோசிக்​கப்​பட்​டது. சிறப்பு விருந்​தின​ராகப் பங்கேற்ற வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்​மொழி பேசி​ய​தாவது: புதுச்​சேரி​யில் முதல்வர் வீட்டு வாயி​லில் கொலை நடக்​கிறது. அடிக்கடி கொலை நடக்​கும் பகுதியாக புதுச்​சேரி மாறி​விட்டது. தமிழகத்​தி​லும் கொலைகள் அதிகரித்து​விட்டன.

மாமல்​லபுரத்​தில் 12 ஆண்டு​களுக்​குப் பிறகு மீண்​டும் பாமக சார்​பில் சித்திரைத் திரு​விழா மற்றம் வன்னியர் சங்க இளைஞர் மாநாடு நடத்​தப்பட உள்ளது. மாநாட்டுக்கு இளைஞர்கள் திரண்டு வர வேண்​டும். போலீ​ஸார் தடுத்​தால், தடையை மீறி இந்த மாநாடு நடத்​தப்​படும். அடுத்​தும் எங்கள் ஆட்சி​தான் என்று உதயநிதி கூறுகிறார். இதற்​குப் போட்​டியாக ஒரு சினி​மாக்​காரர் (நடிகர் விஜய்) மாநாடு நடத்தி, 2026-ல் ஆட்சி அமைப்​போம் என்கிறார். அடுத்த தேர்​தலில் ஸ்டா​லின் நிச்​சயம் வெற்றி பெற மாட்​டார். இவ்வாறு பு.தா.அருள்​மொழி பேசினார்.

x