கோவை: தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்து செயல்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "கோவை மாவட்டத்தில் 2024ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்து செயல் பட்டவர்களுக்கு, திருவள்ளுவர் திருநாளில் டாக்டர்.அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நவம்பர் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.