சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, நெய் மற்றும் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு தீபாவளி பண்டி கையை முன்னிட்டு, ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன்மூலமாக, தீபாவளி விற்பனையில் இலக்கை எட்டியுள்ளோம். அதன்படி ரூ.118.70 கோடி விற்பனையாகியுள்ளது. நெய் 900 டன்னும், வழக்கமான இனிப்பு மற்றும் சிறப்பு இனிப்பு வகைகள் 510 டன்னும் விற்கப்பட்டுள்ளன. நெய் விற்பனை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 100 டன் அதிகமாக விற்பனை நடைபெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.