தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: பவுன் ரூ.56,920 ஆனது


சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.56,920-க்கு விற்​பனை​யானது.

கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை இறங்​கு​முக​மாகவே இருந்​தது. பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை குறைந்த நிலை​யில், கடந்த 2 நாட்​களாக தங்கம்விலை மீண்​டும் உயர்ந்து வருகிறது. கடந்த 19-ம் தேதி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,065-க்​கும், ஒரு பவுன் ரூ.56,520-க்​கும் விற்​கப்​பட்​டது. இந்த நிலை​யில், நேற்று கிரா​முக்கு ரூ.50 என பவுனுக்கு ரூ.400 அதிகரித்​தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,115-க்​கும், ஒரு பவுன் ரூ.56,920-க்​கும் விற்​பனை​யானது. 24 காரட் சுத்த தங்கம் விலை ரூ.60,960 ஆக இருந்​தது. வெள்ளி விலை​ நேற்றும் ஒரு கிராம் ரூ.101 ஆக​வும், ஒரு கிலோ பார் வெள்ளி ​விலை ரூ.1,01,000 ஆக​வும் இருந்​தது.

x