குடியரசு தலைவர் உதகை வருகை: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


உதகை தீட்டுக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் நேற்று சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள். படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். வரும் 27-ம் தேதி டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்​துக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலி​காப்டர் மூலம் உதகை ராஜ்பவன் வருகிறார்.

வரும் 28-ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதி​யில் அமைந்​துள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி​யில் நடைபெறும் நிகழ்ச்​சிகளில் பங்கேற்றுப் பேசுகிறார். 29-ம் தேதி உதகை ராஜ்பவனில் ஓய்வெடுக்​கும் அவர், 30-ம் தேதி காலை ஹெலி​காப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்​துக்​குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்​கிறார்.

இதையொட்டி உதகை தீட்டுக்​கல்​லில் உள்ள ஹெலி​காப்டர் தளம் காவல் துறை கட்டுப்​பாட்டுக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. துப்​பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்​டுள்​ளனர்.

இந்நிலை​யில், ஹெலி​காப்டர் தளத்​தில் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று தீவிர சோதனை​யில் ஈடுபட்​டனர். மேலும், ஹெலி​காப்டர் தளத்தை சீரமைக்​கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்​டுள்​ளனர். தீட்டுக்​கல்​லிலிருந்து உதகை ராஜ்பவன் வரும் சாலையை சீரமைக்​கும் பணியில் நகராட்சி நிர்​வாகம் ஈடுபட்​டுள்​ளது. உதகை பூங்கா சாலை​யோரம் உள்ள மழைநீர் கால்​வாய் சீரமைக்​கப்​பட்டு வருவதுடன், ராஜ்பவனும் புதுப்​பொலிவுபடுத்​தப்​பட்டு வருகிறது. இதற்​கிடை​யில், பாது​காப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா, எஸ்.பி. நிஷா தலைமை​யில் தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.

x