நெல்லையில் பெய்துவரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


மழை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக நான்கு நேரில் 58 மில்லி மீட்டரும், கண்ணாடியின் அணைக்கட்டு பகுதியில் 55 மில்லி மீட்டர், களக்காட்டில் 57 மில்லி மீட்டர், மூளைக்கரை பட்டியில் 40 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 456 மில்லி மீட்டர், நான்கு நேரில் 58 மில்லி மீட்டர் சேரன்மகா தேவியில் 47 மில்லிமீட்டரும் பெய்தது.

மேலும், அம்பாசமுத்திரத்தில் 38 மில்லி மீட்டர், பாளையங்கோட்டையில் 32 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும், ராதா படத்தில் 33 மில்லி மீட்டர், திருநெல்வேலியில் 20 மில்லி மீட்டரும், சேர்வலாளர் அணை பகுதியில் 38 மில்லி மீட்டர், கொடுமுடி ஆறு அணைப்பகுதியில் 21 மில்லி மீட்டரும், நம்பி ஆறு அணைப்பகுதியில் 16 மில்லி மீட்டரும், என திருநெல்வேலி மாவட்ட சமவெளி பகுதிகளில் 539 மில்லி மீட்டர், அதாவது சுமார் 54 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. கனமழையால் நெல்லை மாவட்டம் உட்பட இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

x