தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்வு:  ரூ.57,000யை நெருங்கியது


தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சென்னையில் இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த திங்களன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்த தங்கம் நேற்றும் சவரனுக்கு ரூபாய் 560 உயர்ந்து அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏறுமுகத்தில் இருக்கிறது தங்கத்தின் விலை. இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,000யைக் கடந்து ரூ.7,115க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

x