மாமல்லபுரம் கடலோர பகுதிகளில் ‘ஆபரேஷன் சீ விஜில்’ ஒத்திகை: போலீஸார் தீவிர சோதனை


மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகளில் சீ விஜில் ஒத்திகையாக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் போலீஸார் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் உள்ளிட்ட கடலோர கிராமப் பகுதிகளில் இரண்டு நாட்கள் சீ விஜில் ஒத்திகையாக கடலோர படையினர் கடலில் சென்று கடல் வழி சோதனையிலும் மற்றும் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் சட்ட ஒழுங்கு போலீஸார் இணைந்து ‘ஆபரேஷன் சீ விஜில்’ என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களாக மேற்கொள்கின்றனர்.

இதில், ஒத்திகையின் முதல் நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமப்பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில், சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரம் மற்றும் அணுமின் நிலையம் அமைந்துள்ள கல்பாக்கம் உள்பட கடலோர கிராமப் பகுதிகளில் உள்ள கடலில், கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் படகில் சென்று கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். இதில், தீவிரவாதிகள் போல் கடல் வழியாக யாரேனும் ஊடுருவ முயல்கிறார்களா என கண்காணித்தனர்.

மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகளில் சீ விஜில் ஒத்திகையாக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் போலீஸார் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

x