தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.56,520-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் உயர்ந்து ரூ.56 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.7,065-க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.56,520-க்கும் விற்பனையானது.
தங்கத்தின் விலை கடந்த 10-ம் தேதி ஒரு பவுன் ரூ.58,200-க்கு விற்பனை ஆனது. பின்னர், கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55,480-க்கு விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.56 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.60,560-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை: நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,01,000 ஆக இருந்தது