தென் தமிழகம், டெல்டாவில் பருவமழை தீவிரம்: 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தென் தமிழகம், டெல்டா பகுதி களில் பருவமழை தீவிரமடைந் துள்ள நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. டெல்டா மற்றும் திருநெல்வேலி, கன்னி யாகுமரி உள்ளிட்ட 10 மாவட் டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந் துள்ளது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 24-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று (நவ.19) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டாமாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னி யாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத் தில் அதிகபட்சமாக நாகப்பட் டினம் மாவட்டம் வேதாரண்யத் தில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. நாகை மாவட்டம் கோடியக்கரை யில் 15 செ.மீ. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி யில் 10 செ.மீ. தலைஞாயிறில் 7 செ.மீ. காரைக்காலில் 6 செ.மீ. ராமநாதபுரம் மாவட்டம் பாம் பன், நாகப்பட்டினம், வேளாங் கண்ணியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x