தமிழக அரசின் நிதி பகிர்வு பரிந்துரைகள் பிற மாநிலங்களின் கருத்துகளை கேட்டபிறகு முடிவெடுப்போம்: நிதிக்குழு தலைவர் தகவல்


16-வது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா | படம்: ஆர்.ரகு

சென்னை: மத்திய அரசின் 16-வது நிதிக்​குழு சென்னை வந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நடத்​தப்​பட்ட ஆலோசனைக்​குப் பின்னர் குழு​வின் தலைவர் அர்விந்த் பனகாரியா செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மேலும் 16 மாநிலங்​களின் கருத்​துகளை கேட்க இன்னும் 7 மாதங்கள் பயணிக்க உள்ளோம். தமிழக அரசு தனது அறிக்கையை சிறப்பாக தயாரித்​துள்ளது. செங்​குத்து வரிப் பகிர்வை தற்போதுள்ள மாநிலம் 41 சதவீதம்; மத்திய அரசு 59 சதவீதம் என்பதை மாநிலத்​துக்கு 50 சதவீதமாக உயர்த்த வேண்​டும் என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கோரு​கின்றன.

நாட்​டின் மொத்த உள்நாட்டு உற்பத்​தி​யில் 8 சதவீதம் பங்களிப்பை தமிழகம் வழங்​கு​வ​தால், அதே அளவு நிதிப்​பகிர்வை தமிழக அரசு எதிர்​பார்க்​கிறது. உள்ளாட்​சிகளுக்கான நிதி ஒதுக்​கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்க கோரி​யுள்​ளது. தனிநபர் வருவாய் வேறு​பாட்டை பெயரளவுக்கு கருதக்​கூடாது. அது அதிகமாக விலை​வாசி உயர்​வுடன் தொடர்​புடையதாக உள்ளது என தமிழகம் தெரி​வித்​துள்ளது. இதைக் கருத்​தில் கொண்டு வரிப்​பகிர்​வுக்காக தனிநபர் வருமான வரம்பை 45 லிருந்து 35 சதவீதமாக குறைக்க பரிந்​துரைத்​துள்ளது. மற்ற 16 மாநிலங்​களுக்கு சென்று வந்த பின் தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்​வோம்.

மத்திய அரசின் நிதி உதவி திட்​டங்​களில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு 60 மற்றும் 40 சதவீதமாக உள்ளது. கூடுதல் நிதிக்கு பரிந்​துரைக்க வேண்​டும் என கோருவது மாநிலங்​களின் உரிமை. நிதிப்​பகிர்வு உயர்த்துவது குறித்து அனைத்து மாநிலங்​களின் கருத்​துகளை கேட்ட பின்னர் முடி​வெடுப்​போம். பேரிடர் மேலாண்மை நி​தி​களுக்கு ​மாற்று வழிகளும் ஆராயப்​படும். பேரிடர் குறி​யீட்டுக்​குள் வ​ராதவற்றுக்​கும் நிதி அளிப்​ப​தற்கான பரிந்​துரைகள் குறித்து ஆய்​வு செய்​யப்​படும்​.

x