குடியரசு தலைவர் நவ. 27-ல் தமிழகம் வருகை: 30-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்


உதகை: ​திரு​வாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி​யில் அதிகாரி​ளுடன் கலந்​துரை​யாடல் ஆகிய நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நவ.27-ம் தேதி தமிழகம் வருகிறார்.

அதன்படி நவ.27-ம் தேதி டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கோவை, சூலூர் விமானப்படை விமான தளத்​துக்கு வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அங்கிருந்து ஹெலி​காப்டர் மூலம் உதகை வருகிறார். ராஜ்பவனில் அன்றைய தினம் ஓய்வெடுக்​கிறார்.

நவ.28-ம் தேதி சாலை மார்க்​கமாக குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்​குச் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​கிறார். அப்போது அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் மத்தி​யில் குடியரசு தலைவர் உரையாற்றுகிறார். இதன் பின்னர் மீண்​டும் ராஜ்பவன் வந்து தங்கு​கிறார்.

நவ.29-ம் தேதி உதகை ராஜ்பவனில் பழங்​குடியின மக்களைச் சந்திக்​கிறார். 30-ம் தேதி காலை ஹெலி​காப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்​துக்​குச் செல்​லும் அவர், திருச்சி சென்று அங்கிருந்து திரு​வாரூர் செல்​கிறார். திரு​வாரூரில் மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்​சிகளில் பங்கேற்ற பின்பு மீண்​டும் திருச்சி வந்தடைந்து, திருச்​சி​யில் இருந்து டெல்லி திரும்பு​கிறார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்​டத்​தில் பாது​காப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமை​யில் மாவட்ட காவல் கண்காணிப்​பாளர் என்.எஸ்​.நிஷா, விமானப்படை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்​தினர். மேலும், நவ.23-ம் தேதி முதல் திரு​வாரூர் மத்திய பல்கலைக்​கழகத்​தின் அனைத்து நடவடிக்கைகளும் குடியரசுத் தலை​வரின் பாது​காப்பு ஏற்​பாட்டுக் குழு​விடம் ஒப்​படைக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

x