ராமநாதபுரம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் முருகேஸ்வரி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ஞானதம்பி, மாவட்டத் துணைத் தலைவர் பவுல்ராஜ் அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் புதிய செயலாளராக அப்துல் நஜ்முதீனும், பொருளாளராக முனீஸ்பிரபு நிர்வாகிகளாக விஜயராமலிங்கம் (கூட்டுறவு), பவுல்ராஜ் (நெடுஞ்சாலை), ரோஸா நாரா பேகம் (ஊரக வளர்ச்சி), பாண்டி ( சாலைப் பணியாளர்), சரவணன் (பிற்பட்டோர் நலம்), வேலுச்சாமி (புள்ளியியல் துறை) வினோத் குமார் (நில அளவை), முத்துச் சாமி (கால்நடைத்துறை), சரத் மோகன் (மீன்வளத்துறை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.