உதகை: நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அரசு மருத்துவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் தினேஷ் மற்றும் இந்திய அவர்கள் சங்க செயலாளர் குரு மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: "அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறோம். அவசர சிகிச்சை பிரிவு இயங்குகிறது. வெளிபுற நோயாள்கள் பிரிவில் மருத்துவர்கள் பணி புரியவில்லை" என்றனர். மருத்துவர்கள் போராட்டம் காரணமாக வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.