தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச் சுவடிகளை பார்வையிட்ட ஆளுநர்


தஞ்சாவூர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நண்பகல் 12 மணியளவில் தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்தார். அங்கு வசித்து வரும் மராட்டிய மன்னர் குடும்பத்தினர் வழிபாடு செய்யும் சந்திர மவுலீஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் வழிபட்டார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குடும்பத்தினர் ஆளுநரை வரவேற்றனர்.

பின்னர், சரஸ்வதி மகால் நூலகத்துக்கு வந்த ஆளுநரை, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், எஸ்.பி. ஆஷிஷ்ராவத், சரஸ்வதி மகால் நூலக நிர்வாகக் குழு உறுப்பினர் சிவாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் வரவேற்றனர். அங்குள்ள நூலக ஒலி-ஒளி காட்சியகத்தில் தஞ்சாவூரின் வரலாறு, சுற்றுலாத் தலங்கள் அடங்
கிய குறும்படத்தை 25 நிமிடங்கள் பார்வையிட்டார். தொடர்ந்து, அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், ஓவியங்கள், பழ
மையான போர்க் கருவிகள் ஆகியவற்றை ஆளுநர் ஆர்வமுடன் பார்வையிட்டார். அவருடன் அவரது மகன் ராகுல் ரவி வந்திருந்தார். ஒரு மணிநேரம் அரண்மனை வளாகத்தில் இருந்த ஆளுநர், அங்கிருந்து சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.

பெரிய கோயிலில் தரிசனம்: பின்னர், நேற்று மாலை தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்த ஆளுநர், வராஹி அம்மன், பெருவுடையார், விநாயகர், கருவூரார், முருகன், பெரியநாயகி அம்மன் சந்நிதிகளில் வழிபட்டார். பிரதோஷம் என்பதால் நந்தியம்பெருமானை வழிபட்டுவிட்டு, கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சரஸ்வதி மகால் நூலகம், பெரிய கோயில் ஆகிய இடங்களுக்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து ஒரு இளைஞர் சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர், அவர் யார் என விசாரிக்கும்படி உள்ளூர் போலீஸாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர் தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவைச் சேர்ந்த ஜாபர்தீன் (35) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏன்
ஆளுநரை பின்தொடர்ந்து சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் பழமையான ஓலைச் சுவடிகளை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: ஆர்.வெங்கடேஷ்

x