அரசு பேருந்தில் பயணம்: குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்


சென்னை: பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு இயக்குநர் ஆல்பிஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில் மாதந்தோறும் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. தற்போது பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், அனைத்து பயணிகளும் பயன்பெறும் வகையில் குலுக்கல் முறையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, விடுமுறை நாட்கள் உட்பட முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளின் பயணச்சீட்டும் குலுக்கலில் இடம்பெறும். இத்துடன் மேலும் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது நவம்பர் 21-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை பயணிப்போருக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி இருசக்கர வாகனம், எல்இடி டிவி, ஃபிரிட்ஜ் ஆகியன வழங்கப்படும்.

x