மின் கட்டணத்தை குறைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் புதுச்சேரி அமைச்சர் மனு 


புதுச்சேரி: மின் கட்டணத்தை குறைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் புதுச்சேரி அமைச்சர் மனு அளித்துள்ளார்.

புதுச்சேரியில் மின்கட்டணத்தை குறைக்கக்கோரி மத்திய மின்துறை அமைச்சரிடம் புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று மனு அளித்தார்.

புதுடெல்லியில் இன்று மின்துறை அமைச்சர்களின் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார். இம்மாநாட்டில் புதுச்சேரியில் மின் துறையின் வளர்ச்சி மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து நமச்சிவாயம் பேசினார்.

அதைத்தொடர்ந்து மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லாலிடம் மனு ஒன்றை நமச்சிவாயம் அளித்தார். அதுதொடர்பாக அவர் கூறுகையில், "புதுச்சேரியில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை குறைவான கட்டணம் விதிக்கும் நிறுவனத்திடம் அளித்து புதுச்சேரியில் மின்சார கட்டண உயர்வை குறைக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தேன்" என்றார்.

புதுச்சேரியில் தொடர்ந்து ஆண்டுதோறும் மின்கட்டணம் அதிகரிப்பால் மக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் இம்மனு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x