தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!


வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டு இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில், தற்போது தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இந்த வார இறுதி வரைஇல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

x