உதயநிதி துணை முதல்வரானதில் தவறில்லை: மதுரை ஆதீனகர்த்தர் கருத்து


மயிலாடுதுறையில் மதுரை ஆதீனம்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கியதில் தவறில்லை என்று மதுரை ஆதீனகர்த்தர் தெரிவித்தார்.

மயிலாடுதுறை அருகேயுள்ள சின்னநாகங்குடியில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தம்பிரான்கள் ஆதீனத்துக்கு கட்டுப்பட்டவர்கள். நான் தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தேன். அந்த கட்டுப்பாட்டை மீறாமல்தான் நடந்தேன். ஆதீனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது, ஆதீனகர்த்தர்கள்தான்.

பிரதமர் மோடி மிகவும் வலிமை வாய்ந்தவர். அவரது நடவடிக்கையால் சீனாவே பின்வாங்கிவிட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கோட்டை விட்டதை மோடி நிமிர்த்தி விட்டார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதில் தவறு ஒன்றுமில்லை. அது முதல்வரின் இஷ்டம். கருணாநிதியின் பேரன், முதல்வரின் மகன் என்ற வகையில் நியமித்திருக்கலாம். அவ்வாறு நியமித்ததில் தவறில்லை. இவ்வாறு மதுரை ஆதீனகர்த்தர் கூறினார்

x