மண்டபம் - ராமேசுவரம் ரயில் பாதையில் 90 கி.மீ. வேகத்தில் இன்று ரயிலை இயக்கி சோதனை


ராமேசுவரம்: மண்டபம் - ராமேசுவரம் ரயில் பாதையில் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக 90 கி.மீ. வேகத்தில் இன்று ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: "பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் வழியாக மண்டபம் - ராமேசுவரம் ரயில் பாதையில் இன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் சோதனை ஓட்டமாக ரயில் இயக்கப்பட்டது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடைபெற்றது" என்று அதிகாரிகள் கூறினர்.

x