தாம்பரம்: செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தேர்தல் குழுபயிலரங்கம் நேற்று சேலையூரில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத்தலைவர் டால்பின் தர், செயலாளர்கள் எஸ்.ஜி.சூர்யா, மீனாட்சி நித்திய சுந்தர்,கே.பி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கிளை முதல் மாவட்டம் வரை நடைபெறும் பாஜகவின் அமைப்பு தேர்தல்கள் சம்பந்தமாக பயிற்சி அளித்தனர்.
இதில் பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட அளவிலான பாஜக நிர்வாகிகளுக்கு தீவிரஉறுப்பினர் சேர்க்கை, அமைப்பு தேர்தல் சம்பந்தமான பயிற்சி அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் 1303 கிளைகளுக்கும், 20 மண்டலங்களுக்குமான தேர்தல்கள் வருகின்ற 15-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.