மதுரை: மதுரை மாநகராட்சியில் பல வார்டுகளில் மழைநீரை பாதாள சாக்கடை தொட்டிகளில் திறந்துவிடுவதால் குடியிருப்பு பகுதிகள், முக்கிய சாலைகளில் கழிவுநீர் பொங்கி வழிந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் கழிவுமதுரை மாநகராட்சியில் பல வார்டுகளில் மழைநீரை பாதாள சாக்கடை தொட்டிகளில் திறந்துவிடுவதால் குடியிருப்பு பகுதிகள், முக்கிய சாலைகளில் கழிவுநீர் பொங்கி வழிந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.நீரை தடையின்றி வெளியேற்றக்கூடிய பாதாள சாக்கடை கட்டமைப்பு வசதிகள் தற்போதுவரை முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. முறையாக பராமரிக்காததால் பாதாள சாக்கடையில் கழிவுநீர் அடைப்பு ஏற்படுவதையும், ஆள்நுழைவு குழிகளில் கசிவு ஏற்படுவதையும் தடுக்க முடியவில்லை. மக்கள்தொகை பெருக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தும், பழைய பாதாள சாக்கடை கட்டமைப்பே உள்ளன. அதன் வழியாக கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் நிலவுகிறது.
புறநகரில் உள்ள 28 வார்டுகளில் தற்போதுதான் புதிய பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், அது செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாய்களிலும், வாய்க்கால்களிலும் வெளியேறுகிறது. அருகில் உள்ள கண்மாய்களில் திறந்த வெளியில் விடுகின்றனர். குறிப்பாக வைகை ஆற்றையொட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து நிரந்தரமாக கழிவுநீர் திறந்தவெளியில் வெளியேற்றப்படுகிறது.
சாலைகளில் தேங்கும் மழைநீரை பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டிகளில் திறந்துவிடுகின்றனர். குப்பையுடன் சேர்ந்து மழைநீரும் பாதாள சாக்கடை குழாய்களுக்குள் புகுந்து அடைப்பு ஏற்படுகிறது. மழைநீரை பாதாள சாக்கடை தொட்டிகளில் திறந்துவிடக் கூடாது என்று மாநகராட்சி ஆணையர் பலமுறை எச்சரித்துள்ளார். எனினும், மழைநீரை வெளியேற்ற அதற்கான வடிகால் வசதிகள் இல்லாததால் ஊழியர்கள் சிலர் இந்த தவறான வழிமுறையை கையாளுகின்றனர். இதன் காரணமாக, நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் பொங்கி வழிந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. சாலைகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மகாத்மா காந்தி நகரில் மெயின் ரோட்டில் உள்ள ஆள்நுழைவு தொட்டிகளிலிருந்து வெளியேறிய கழிவுநீர், 16-வது வார்டு முல்லை சர்ச் ரோடு, கிருஷ்ணாபுரம் 8-வது குறுக்கு தெரு, குறிஞ்சி நகர் 2-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆறுபோல் ஓடுகிறது. இந்த கழிவுநீர் அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றுவதற்காக தோண்டிய பள்ளங்களில் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மழையில்லாத காலங்களிலும் இந்த பள்ளங்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதால், அந்த வழியாக கார், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தனி தீவில் வசிப்பதுபோல் உணருகிறார்கள். இதே நிலை, மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் நிலவுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மழைநீரை பாதாள சாக்கடை தொட்டிகளில் திறந்துவிடுவதை தடுக்கவும், நிரந்தர வடிகால் வசதியை ஏற்படுத்தவும், பாதாள சாக்கடை கட்டமைப்பை விரைவாக சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.