கோவை: கல்லறை தோட்டங்களில் சிறப்புப் பிரார்த்தனை


கல்லறை தோட்டங்களில் சிறப்புப் பிரார்த்தனை

கோவை: கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள கல்லறை தோட்டங்களில் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் சிறப்புப் பிராத்தனை இன்று நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் கோவை சுங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு திரளான கிறிஸ்தவர்கள் நேற்று சென்றனர். அங்கு தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வண்ண மலர்கள், மாலைகளால் அலங்கரித்தனர்.

இதில், திருச்சி சாலையில் உள்ள சிஎஸ்ஐ மற்றும் ரோமன் கத்தோலிக்க கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது, கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இறந்தவர்களை நினைத்து பிரார்த்தனை செய்து கண் கலங்கினர். அங்குள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவு, ரொக்க பணத்தை வழங்கி உதவினர். கல்லறை திருநாளையொட்டி கல்லறை தோட்டங்கள் உள்ள பகுதிகளில் தற்காலிக பூக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

x