கரூர்: கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுப்பாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்தவர்கள் மீது காவல் துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி நிகழாண்டும் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை என நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையான நேற்று விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக கரூர் மாவட்டத்தில் உள்ள 17 காவல் நிலையங்கள் மூலம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.