50 சதவீத தள்ளுபடி... இன்று அதிகாலை ஜவுளிக்கடையில் குவிந்த பொதுமக்கள்!


நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று, ‘ஸ்டாக் க்ளியரன்ஸ் சேல்’ என்று ஈரோடு மாவட்டத்தில் ஜவுளிக்கடைகள் அறிவிப்பு செய்து களத்தில் இறங்கியதால் இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் கடைவீதிகளில் குவிந்தனர்.

தீபாவளியை ஒட்டி, கடந்த ஒரு மாதமாக ஈரோட்டில் ஜவுளி விற்பனை களை கட்டி காணப்பட்ட நிலையில் இன்று பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் ‘ஸ்டாக் கிளியரன்ஸ்’ என்று அறிவித்து 50 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஈரோட்டில் ஜவுளிக்கடைகள் நிறைந்துள்ள ஆர்.கே.வி.சாலை உள்ளிட்ட கடை வீதிகளில் பொதுமக்கள் இன்று அதிகாலை 4 மணி முதலே கடைகளில் குவிய துவங்கினார்கள். தீபாவளிக்கு அடுத்த நாள் இப்படி தள்ளுபடி விலையில் ஜவுளி விற்பனை செய்வதை கடந்த 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள் பின்பற்றி வருவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

x