தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு


சென்னை: மன்னார் வளைகுடா பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டியும் தலா ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நவ.1, 2-ம் தேதிகளில் பெரும் பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திண்டுக்கல், மதுரை, திருச்சி,கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

நவ.1-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர்,ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்கனமழை பெய்யும்.

x