தீபாவளியை முன்னிட்டு இன்றுமுதல் நவ.4 வரை 32 விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு


சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் நவம்பர் 4-ம் தேதி வரை காத்திருப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ள முத்துநகர், உழவன், சதாப்தி உள்ளிட்ட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இன்றும், நாளையும் (அக்.29, 30) புறப்படும் அனைத்து ரயில்களிலும் ஏற்கெனவே முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த ரயில்களில் மொத்தமாக 7,000 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காத்திருப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து இயக்கப்படும் சதாப்தி, முத்துநகர், காரைக்கால் உள்ளிட்ட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைப்படுகிறது. அந்த ரயில்கள் விவரம்:

நவம்பர் 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் விரைவு ரயில், மறுமார்க்கமாக, நவம்பர் 3-ம் தேதி நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில், அக்.30, நவ.1, 3, 5-ம் தேதிகளில் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், மறுமார்க்கமாக, அக்.29, 31, நவ.2, 4-ம் தேதிகளில்

தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் விரைவு ரயில், அக்.30, 31-ம் தேதிகளில் சென்னை எழும்பூர் - காரைக்கால் விரைவு ரயில், மறுமார்க்கமாக, நவ.2, 3-ம் தேதிகளில் காரைக்கால் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், அக்.29, 30, நவ.1, 2-ம் தேதிகளில் சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், மறுமார்க்கமாக, அக்.30, 31, நவ.2, 3-ம் தேதிகளில் தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், அக்டோபர் 30, நவ.3-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும் ஒரு சேர் கார் பெட்டி இணைக்கப்படுகின்றன. இதுதவிர, சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயிலில் ஒரு பெட்டி சேர்க்கப்பட உள்ளது. இவ்வாறு இன்று (அக்.29) முதல் நவ.4-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி சேர்க்கப்பட உள்ளது.

x