சென்னை: தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிப்போருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தாய்மொழி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஊக்குவிக்கவும், மொழி, பண்பாட்டுக் கலாச்சார மரபுகள் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய கூறுகளை அறிந்துகொள்ளவும், பல்வேறு மொழி பேசும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், நாட்டின் வளர்ச்சிக்கும் அவரவர் தாய்மொழியை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தவும் தாய்மொழியில் புலமையை வளர்க்கும் நோக்கிலும் மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்த உள்ளது. கட்டுரைகளும், கவிதைகளும் தமிழின் தொன்மை, தனித்தன்மை, மரபு தொடர்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
கட்டுரை தலைப்பு;
கவிதை தலைப்பு;
போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கட்டுரை 10 பக்கங்களுக்கும், கவிதை 30 அடிகளுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். தட்டச்சு செய்யாமல் சொந்த கையெழுத்துப் படியாக இருக்க வேண்டும். படைப்புகளை பள்ளி முதல்வர் அல்லது கல்லூரியின் முதல்வர் ஒப்புதலுடன் அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம், மாணவர்கள் தங்கள் படைப்புகளை, ‘இயக்குநர், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100’ என்ற முகவரிக்கு நவம்பர் 23-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.