மருது சகோதரர்கள் நினைவுதினம்: திருவுருவ சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்த குன்றக்குடி அடிகளார்


இன்று மாமன்னர்கள் மருதுபாண்டிய சகோதரர்கள் 223வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார் கோவிலும் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு குன்றக்குடி அருள்தரு ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோயிலில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்து தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழிபாடு செய்தார்.

1950 ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தினத்தின் நினைவாக குன்றக்குடி அருள்தரு ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோயில் தேவஸ்தானத்தால் நிறுவப்பட்ட ரேடியோ நிலையத்திற்கு,"வீர மருது சகோதரர்கள் பூங்கா "என்று பெயரிடப்பட்டது. இன்று மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை ஒட்டி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால் பூங்கா மீண்டும் புதுப்பிக்க பெற்று, மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x