போக்குவரத்துக்கழக பிரச்சினை குறித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சென்னையில் அக்.26-ல் ஆலோசனை


சென்னை: சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் ஆகிய சங்கங்கள் ஒன்றி ணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணி புரியும் 1.25 லட்சம் ஊழியர்கள், ஓய்வுபெற்ற 95 ஆயிரம் ஊழியர்கள் என மொத்தம் 2.25 லட்சம் பேர் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது, நிலுவைத்தொகை, ஓய்வுகால பணப் பலன்கள் வழங்கப்படாமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, போக்குவரத்துகழகங்களை பாதுகாக்கவும், ஊழியர்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கவும் எல்பிஎப் (தொமுச), ஏடிபி (அண்ணா தொழிற் சங்கம்), சிஐடியு, எஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் உள்பட அனைத்து கழகங்களிலும் செயல்படும் பேரவை சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தீர்வுகாண முடியும். இது தொடர்பாக விவாதிக்க வரும் 26-ம் தேதி பெரம்பூரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

x