விழுப்புரம்: இந்த ஆண்டில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்


விழுப்புரம்: நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த போலீஸார் நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவுத் தூணில் கடந்த ஓராண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து காவல்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த 213 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமால், தினகரன் ஆகியோரும் விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குப்தா, திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், விக்கிரவாண்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார், பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கந்தசாமி (ஆயுதப்படை பொறுப்பு), ஊர் காவல் படை மாவட்ட தலைவர் நட்டர்ஷா மற்றும் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அமர்நாத், விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

x