சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் | காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு


சென்னை: சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் "காவலர் நீத்தார் நினைவு நாள்" அனுசரிப்பதை ஒட்டி அக்.21-ம் காலை 8 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம், எதிர்திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

அதேபோல், எம்ஆர்டிஎஸ் - ஆர்.கே.சாலை சந்திப்பு-ஐ தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது, காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் எம்ஆர்டிஎஸ் சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை, காமராஜர் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகர பேருந்து (21 ஜி) ராயப்பேட்டை பாயின்ட், மியூசிக் அகாடமி பாயின்ட், டிடிகே சாலை, இந்தியன் வங்கி சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஜிஆர்எச் பாயிண்ட், அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கதீட்ரல் ரோடு லைட் ஹவுஸ் நோக்கி வரும் மாநகர பேருந்து (27 டி) வி.எம் தெருவில் திருப்பிவிடப்பட்டு, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, D' ஸ்லிவா சாலை, பக்த்வச்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, பீமனா கார்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை, சீனிவாசன் தெரு, ஆர்.கே. மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x