குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் சால்வியா மலர்கள்!


மலர்கள்

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இதமான காலநிலை நிலவி வருவதால் அங்கு பூத்துக் குலுங்கும் சால்வியா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசனுக்கு 1.90 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. குறிப்பாக, ரோஜா, மேரி கோல்டு, பால்சம், டேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட வகையிலான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தச் செடிகள் அனைத்தும் பூக்கத் தொடங்கி உள்ளன. அதே நேரத்தில், மழை தொடர்ந்து நீடித்து வருவதால் மேரி கோல்டு, டேலியா உட்பட சில வகை பூக்கள் அழுகி வருகின்றன.

மலர்கள்

இருப்பினும் தற்போது சிவப்பு நிறத்தில் சால்வியா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.மேலும், இந்தப் பகுதியில் தற்போது ரம்யமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் பூக்கள் முன்பு நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

x