கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் நுழைவுச்சீட்டு வழங்கும் நேரத்தில் மாற்றம்


சென்னை: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பறவையகம், ஜிப்லைன் மற்றும் இசை நீரூற்று ஆகியவற்றுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு, கனமழை எச்சரிக்கையின் காரணமாக கடந்த அக்.15 முதல் நேற்றுவரை (அக்.18) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்றுமுதல் (அக். 19) வழக்கம் போல் பூங்கா செயல்படும்.

கூட்ட நெரிசலைத்தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கான நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets என்றஇணையதளம் வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பறவையகம், ஜிப்லைனுக்கு மாலை4 மணிவரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.

மேலும், இசை நீரூற்றுக்கு ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதால், மாலை4 மணி முதல் இணையதளம் வாயிலாக நுழைவுச்சீட்டுபெற்றுக் கொள்ளலாம். மாலை 6 மணி வரை பொதுநுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும்.

x