அக்.22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது


சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வடக்கு அந்தமான் கடல் பகுதியில் அக்டோபர் 20-ம் தேதி (நாளை) புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் 22-ம் தேதி வாக்கில் மத்தியவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 24-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

x