சிவகங்கை ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் அமோனியம் வாயு கசிவு - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்


சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் பால் குளிரூட்டும் நிலையத்தில் அமோனியம் வாயு கசிவையடுத்து குழாய் வால்வை அடைக்க  கவச உடை அணிந்து சென்ற தீயணைப்பு வீரர்.

சிவகங்கை: சிவகங்கை ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் அமோனியம் வாயு கசிவால் ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 10,000 லிட்டர் வரை இங்கு குளிரூட்டலாம். வெள்ளிக்கிழமை (அக்.18) இரவு திடீரென அமோனியம் வாயு வெளியேறியது. இதனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர் மதுரைவீரன் என்பவர் கவசஉடை அணிந்து சென்று அமோனியம் விநியோக குழாய் வால்வை அடைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் பால் குளிரூட்டும் பணி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x