வடகிழக்கு பருவமழை மருத்துவ முகாம்களால் தமிழகம் முழுவதும் 78 ஆயிரம் பேர் பயன்


கோப்புப் படம்

சென்னை: வடகிழக்குப் பருவமழையைமுன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற மருத்துவ முகாம்களால் 78 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை தொடங்கி 2 நாட்களாகிறது. முதல்வரின் வழிகாட்டுதல்படி, மழைக்கால நிவாரணப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை சார்பில் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் 1,293 இடங்களில் முகாம்கள் நடைபெற்று, 78 ஆயிரம் பேர்பயனடைந்துள்ளனர். இவர்களில்6,000 பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.

வடகிழக்குப் பருவமழை முடியும்வரை, தேவைப்படும் இடங்களில் எல்லாம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்

x